×

தம்பதியை கட்டி போட்டு கொள்ளை; கேரள வாலிபர் உட்பட 8 பேர் ைகது : வாகன தணிக்கையில் சிக்கினர்

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே கடமலைபுத்தூரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அதிகாலை கஜவரதன், ஜெகதா தம்பதியினர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் பிளாஸ்டிக் டேக்கில் கட்டிப்போட்டு தங்கம், வெள்ளி, நகை, பணத்தை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் தலைமையில் போலீசார் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதில், கர்நாடகாவில் கொள்ளையடிக்கும் முகமூடி அணிந்த டேக் கொள்ளையர்கள்போல தெரிந்ததால் போலீசார் அதிதீவிர விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து போலீஸ் ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில், காஞ்சிபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி சத்யபிரியா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி.அரவிந்தன் ஆகியோர் நேரடி மேற்பார்வையில், மதுராந்தகம் போலீஸ் டி.எஸ்.பி ஆர்.பாரத் தலைமையில், பயிற்சி போலீஸ் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் மற்றும் அச்சிறுப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜா.இளவரசன், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.ருக்மாங்கதன், சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ்.மதியரசன் ஆகியோர் தலைமையில் முப்பதுக்கும் மேற்பட்ட போலீசார் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும், போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குற்றவாளிகள் கர்நாடகா தப்பிச்செல்ல முயல்வதாக அறிந்து செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு போலீசாரின் வாகன தணிக்கையின்போது எட்டு பேர் கொண்ட முகமூடி அணிந்த டேக் கொள்ளையர்களை தொழுப்பேடு சுங்கச்சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு காரையும், அதிநவீன விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினர். பின்னர், அவர்களை தீவிர விசாரணை செய்ததில், கடமலைபுத்தூர் கஜவரதன் குடும்பத்தில் கொள்ளையடித்த கும்பல் என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இவர்கள், மேலும் பல இடங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்டு செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் சுற்றியதும் இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 9 பேர் ஈடுபட்டனர். அதில், 8 பேரை போலீசார் ஒட்டுமொத்தமாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். இதில், சேலம் மாவட்டத்தை சேர்ந்த கேசவன் (39), பிரபு (31), சசிகுமார் (36), முகமது அப்துல்லா (23), அருள் முருகன் (36), ராஜா (30) மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), கேரள மாநிலத்தை சேர்ந்த  ரஞ்சித் (32) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்தனர். அவர்களிடம் இருந்த விலை உயர்ந்த சொகுசு கார், விலை உயர்ந்த நவீன மோட்டார் பைக் அவர்கள் அணியும் முகமூடி, ரெயின் கோட், கத்தி, கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை உருக்கி கட்டியாக வைத்திருந்ததை போலீசார் கைப்பற்றினர்.  கொரோனா பரிசோதனைக்குபின் நேற்று இரவு மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 8 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்….

The post தம்பதியை கட்டி போட்டு கொள்ளை; கேரள வாலிபர் உட்பட 8 பேர் ைகது : வாகன தணிக்கையில் சிக்கினர் appeared first on Dinakaran.

Tags : Madhurandakam ,Gajavarathan ,Jagata ,Kadamalaiputhur ,Achirupakkam ,Chengalpattu district ,Kerala ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டாரப்...