×

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: நார்வே செஸ் 2025 தொடரில் நமது குகேஷ் 14.5 புள்ளிகளுடன் அபாரமாக விளையாடி மூன்றாம் இடம் பெற்றிருப்பதில் பெருமை கொள்கிறேன். மிகச் சிறந்த திறமையும் உறுதியும் ஒருங்கே பெற்றுள்ள குகேஷ் இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாகத் தொடர்ந்து மிளிர்கிறார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kukesh ,Chennai ,K. Stalin ,K. ,Stalin ,Norway Chess 2025 ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் டிச.24 வரை வறண்ட வானிலை...