×

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் தகர்ப்பு: வெளியான புதிய தகவல்

புதுடெல்லி:ஆபரேஷன் சிந்தூரின்போது இந்தியப் படைகள் பயன்படுத்திய பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள், இரண்டு எச்சரிக்கை கருவிகள், 30க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், பல ஆளில்லா விமானங்கள் (யுஏவி) மற்றும் ஒரு சி-130 போக்குவரத்து விமானம் அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானுக்கு சொந்தமான சி-130 ஹெர்குலஸ் விமானம் இந்தியாவால் ஏவப்பட்ட டிரோன் மூலம் தகர்க்கப்பட்டது. மேலும் பாக்.கின் முக்கியமான வான்வழி கண்காணிப்பு தளம் அழிக்கப்பட்டது.

பெஷாவர், ஜாங், ஹைதராபாத் (சிந்து), குஜராத் (பஞ்சாப்), பஹாவல்நகர், அட்டாக் மற்றும் சோர் ஆகிய இடங்களில் உள்ள பாக். ராணுவ கட்டமைப்புகள் குறிவைத்து தகர்க்கப்பட்டன. மேலும் பாகிஸ்தான் விமானத் தளங்களாக நூர் கான், ரபிகி, முரித், சுக்கூர், சியால்கோட், பஸ்ரூர், சு போலாரி மற்றும் ஜகோபாபாத் ஆகியவற்றையும் இந்தியா தகர்த்தது.

The post ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 போர் விமானங்கள் தகர்ப்பு: வெளியான புதிய தகவல் appeared first on Dinakaran.

Tags : Operation Sindh ,New Delhi ,Indian forces ,Operation Sindh… ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது