×

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் துணை ராணுவ படையினர் குவிப்பு: தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக பாஜகவினர் போராட்டம் நடத்துவதாக தகவல்

டெல்லி: டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக சற்று நேரத்தில் பாஜகவினர் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இதனையடுத்து இந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஏராளமான போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் இளைஞர்கள் படைகளும் லாவண்யாவிற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சற்று நேரத்தில் அப்பகுதியில் போராட்டம் தொடங்க இருக்கிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த விவகாரத்தில் பாஜகவினர் லாவண்யாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பாஜகவினர் 4 பேர் கொண்ட குழுக்கள் அமைத்து இதற்கு விசாரணை வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இந்த தற்கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ- க்கு மாற்றப்படும் என உத்தரவை பிறப்பிக்க உள்ளது.  பாஜகவினரும் இதே கோரிக்கையை தான் வலியுறுத்தி இருந்தனர், ஏனென்றால் அப்பொழுது தான் நியாயமான விசாரணை மாணவிக்கு கிடைக்கும் என்பதே அவர்கள் கோரிக்கையாக இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் பாஜகவினர் மற்றும் இளைஞர்கள் சேர்ந்து தமிழ்நாடு இல்லத்தின் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். எனவே தமிழ்நாடு இல்லம் முழுவதும் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இருபக்கங்களிலும் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தவிர்த்து முன்னெச்சரிக்கையாக கண்ணீர்புகை குண்டுகளும், பீரங்கிகளும் வைக்கப்பட்டுள்ளது.    …

The post டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் துணை ராணுவ படையினர் குவிப்பு: தஞ்சை மாணவி தற்கொலை தொடர்பாக பாஜகவினர் போராட்டம் நடத்துவதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Delhi ,BJP ,Tanjore ,Tamil Nadu ,Lavanya ,
× RELATED கோவையில் முக்கிய பிரமுகர்கள்...