×

நாசிக் கும்பமேளா அடுத்தாண்டு அக்.31ல் தொடக்கம்

நாசிக்: மகாராஷ் டிராவின் நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வரில் கும்பமேளா விழா நடத்தப்பட உள்ளது. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் கும்பமேளா விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் நாசிக்கில் உள்ள திரிம்பகேஷ்வரில் அடுத்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி கும்பமேளாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. கும்பமேளாவின் முதலாவது அமிர்த நீராடல் 2027 ஆகஸ்ட் 2ம் தேதியும், இரண்டாவது அமிர்த நீராடல் ஆகஸ்ட் 31ம் தேதியும் நடைபெறும். மூன்றாவது, நான்காவது புனித நீராடல்கள் 2027, செப்டம்பர் 11 மற்றும் 2027 செப்டம்பர் 12 ம் தேதிகளில் நாசிக்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாசிக் கும்பமேளா அடுத்தாண்டு அக்.31ல் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nashik Kumbh Mela ,Nashik ,Kumbh Mela ,Trimbakeshwar ,Nashik, Maharashtra ,Kumbh Mela festival ,Chief Minister ,Devendra Fadnavis ,Nashik… ,
× RELATED போராட்டம் காரணமாக மூடப்பட்ட டாக்கா...