- டாக்கா
- இந்தியன் விசா சேவை மையம்
- இந்திய விசா விண்ணப்ப சேவை மையம்
- ஜமுனா ஃபியூச்சர் பார்க்
- குல்னா
- ராஜ்ஷாஹி
டாக்கா: டாக்காவில் தற்காலிகமாக மூடப்பட்ட இந்திய விசா சேவை மையம் நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஜமுனா ஃப்யூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப சேவை மையம் இயங்கி வருகிறது. மேலும், குல்னா, ராஜ்ஷாஹி மற்றும் வடகிழக்கு துறைமுக நகரமான சட்டோகிராம் மற்றும் வடகிழக்கு சில்ஹெட் ஆகிய இடங்களிலும் இந்திய விசா சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தி ஜூலை ஒற்றுமை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் இந்திய தூதரகத்தை நோக்கி நேற்று முன்தினம் (டிச.17) பேரணி நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்கான ஃப்யூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப சேவை மையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்நிலையில் ஃப்யூச்சர் பார்க் பகுதியில் இந்திய விசா விண்ணப்ப சேவை மையம் நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால், குல்னா மற்றும் ராஜ்ஷாஹியில் உள்ள விசா சேவை மையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
