×

நவநீதகிருஷ்ணன் நீக்கத்தையடுத்து அதிமுக வழக்கறிஞர் அணியில் புதிய முகமா? செயலாளர் பதவிக்கு கடும் போட்டி

சென்னை: அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் எம்பி நீக்கப்பட்டதையடுத்து அந்த பதவிக்கு அதிமுக வழக்கறிஞர்கள் இடையே கடும்போட்டி நிலவுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவை, மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து தருதல், தேர்தல் தொடர்பான பிரச்னைகளை தீர்த்துவைத்தல் போன்ற முக்கிய பணிகளை செய்வது அந்தந்த கட்சிகளின் வழக்கறிஞர் அணிதான். இந்த அணிக்கு எப்போதுமே கட்சியில் முக்கியத்துவம் தரப்படும். அரசு வழக்கறிஞர்கள் நியமனம் போன்ற முக்கிய பணிகளையும் வழக்கறிஞர் அணிதான் மேற்கொள்ளும். அதனால் எப்போதுமே கட்சிகளின் வழக்கறிஞர் அணி செயலாளர் பதவிக்கு கடும் போட்டி இருக்கும். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்த நவநீதகிருஷ்ணன் அந்த பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து, அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளர் பதவிக்கு அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அதிமுக வழக்கறிஞர் அணி செயலாளராக பதவி வகித்து வந்த ஆலங்குளம் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஐ.எஸ்.இன்பதுரை, வழக்கறிஞர் அணி இணை செயலாளர் சி.திருமாறன், கட்சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாபு முருகவேல் உள்ளிட்டோர் இந்த பதவிக்கான போட்டியில் உள்ளதாக அதிமுக வழக்கறிஞர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த பதவியை பிடிப்பதற்காக தங்களுக்கு வேண்டப்பட்ட மேலிட தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவதாகவும் கூறப்படுகிறது.  இதுவரை எந்த பதவியும் கிடைக்காத சில அதிமுக வழக்கறிஞர்களும் தங்களுக்கு வேண்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் மூலம் செயலாளர் பதவியை பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் கட்சியின் வழக்கறிஞர் அணி செயலாளர் இல்லாமல் இருப்பது அதிமுக வழக்கறிஞர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post நவநீதகிருஷ்ணன் நீக்கத்தையடுத்து அதிமுக வழக்கறிஞர் அணியில் புதிய முகமா? செயலாளர் பதவிக்கு கடும் போட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Navaneethakrishnan ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்