×

வீரமரணம் அடைந்த 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா பதக்கம்

நியூயார்க்: ஐநா தலைமையகத்தில் நடந்த விழாவில், கடந்த ஆண்டு ஐநா அமைதி காக்கும் படையில் பணியாற்றியபோது உயிர்தியாகம் செய்த இரண்டு இந்தியா வீரர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரிகேடியர் ஜெனரல் அமிதாப் ஜா மற்றும் ஹவில்தார் சஞ்சய் சிங் ஆகியோர் பணியின்போது உயிர்நீத்தனர். உயிர்தியாகம் செய்த இரண்டு இந்திய வீரர்களின் குடும்பங்கள் சார்பாக இந்தியாவிற்கான நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஐநா பொது செயலாளர் ஆன்டனியோ கட்டாரெஸிடம் இருந்து பதக்கத்தை பெற்றுக்கொண்டார். அமைதி காக்கும் பணிக்கு இந்தியா முக்கிய ஆதரவாளராக உள்ளதாக ஐநா துணைச் செயலாளர் ஜீன் பியர் லாக்ரோயிக்ஸ் தெரிவித்துள்ளார்.

The post வீரமரணம் அடைந்த 2 இந்திய வீரர்களுக்கு ஐ.நா பதக்கம் appeared first on Dinakaran.

Tags : New York ,UN ,Headquarters ,Brigadier General ,Amitabh Jha ,Havildar Sanjay Singh ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...