×

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல்

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு வரப்படுகிறது. இதுசார்ந்த கூட்டம் மாதம் ஒருமுறை நடந்து வருகிறது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் சூர்யாகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய கொலீஜியத்தின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதையடுத்து அதில் எடுக்கப்பட்ட முடிவில், ‘‘கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அதுல்.எஸ்.சந்துர்கர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். என்.வி.அஞ்சாரியா, விஜய் பிஷ்னோய், ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

3 பேரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் அளித்த பரிந்துரைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். 3 நீதிபதிகளின் நியமனம் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

The post உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேரை நியமிக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,Supreme Court ,Delhi ,Courts ,Dinakaran ,
× RELATED இருதய இடையீட்டு...