×

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடங்கியது . ஜெர்மனியை சேர்ந்த ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனம், அதன் இந்திய வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 16,500 சதுரஅடியில் புதிய ஆலை திறக்கப்பட்டுள்ள நிலையில் 1.08 லட்சம் சதுரஅடியில் ஆலை விரிவாக்கப்பட உள்ளது. சூளகிரி ஆலையை சேர்த்து ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 5 ஆலைகள் உள்ளன. பெட்ரோல், டீசல் ஹைபிரிட் கார்களுக்கு தேவையான உதிரிபாகங்களை ஸ்கேஃப்லர் உற்பத்தி செய்து வருகிறது.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Schaefler India ,Chulagiri, Krishnagiri District ,Krishnagiri ,Germany ,Schaeffler India ,Soolagiri, Krishnagiri District ,Dinakaran ,
× RELATED மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1...