×

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம் திட்டத்தை தொடங்க ஒப்புதல்: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய விமானப்படையில் இலகுரக போர் விமானமான தேஜஸ் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, நடுத்தர போர் விமானங்களை தயாரிக்க விமானப்படை வலியுறுத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சரவை கூட்டத்தில் 5ம் தலைமுறை நடுத்தர போர் விமானத்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் திட்டத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மெகா திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்த அதிநவீன வசதிகள் கொண்ட 5ம் தலைமுறை போர் விமானத்தை தயாரிக்கும் திட்டத்திற்கான செயல்பாட்டு மாடலை உருவாக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். ஏரோநாட்டிகல் டெவலப்மென்ட் ஏஜென்சி, தனது தொழில்துறை ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து செயல்பாட்டு மாடலை உருவாக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

The post உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம் திட்டத்தை தொடங்க ஒப்புதல்: பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Defense Ministry ,New Delhi ,Tejas ,Indian Air Force ,Air Force ,Modi ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது