×

சென்னையில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்

சென்னை: கொருக்குப்பேட்டையில் ராஜம் டிரேடர்ஸ் என்ற பழைய பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய இரும்பு பொருட்கள், பிளாஸ்டிக் அட்டை, பிளாஸ்டிக் கழிவுகள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. மூட்டை மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் அட்டைகள் எறிந்துள்ளது.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் விபத்தென தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் குறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அருகாமையில் பெட்ரோல் பங்க் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனனர்.

The post சென்னையில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rajam Traders ,Korukkupettai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் பெண்களுக்கு...