×

காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை

தஞ்சாவூர் : தமிழகத்தில் நெற்களஞ்சியமாக விளங்கும் காவிரி டெல்டா பாசன பகுதி விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரம் மேட்டூர் அணை ஆகும்.தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் தென்மேற்கு பருவ மழையையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும் வடகிழக்கு பருவ மழையையும் மேட்டூர் அணையில் சேமித்து வைத்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

டெல்டா பாசன பகுதியின் முக்கியமான சாகுபடி காலமாகவும், ஜீவாதார பருவமாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய குறுவை சாகுபடி பருவம் ஆகும். இந்த பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.தற்போது மேட்டூர் அணையில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளதால் சாகுபடி பணிகள் தடையின்றி நடக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

எனவே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பு காவிரி டெல்டாவில் வறண்ட நிலையில் உள்ள கொள்ளிடம், காவிரி, குடமுருட்டி, அரசலாறு திருமலைரா ஜன், வெண்ணாறு, வெட்டாறு, மண்ணியாறு, தூரியாறு பொய்கையாறு முடிகொண்டான் ஆறு ஆகிய அனைத்து ஆறுகள் மற்றும் அனைத்து ஏரி குளங்களையும் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Cauvery Delta ,Thanjavur ,Mettur Dam ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக...