×

புதிய மணல் குவாரி திறக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட மணல் குவாரிகளை புதிதாக திறக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. இது கண்டிக்கத்தக்கது. தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் உள்ள மலைகள் தகர்க்கப்பட்டு, கனிம வளங்கள் கேரளத்திற்கு கொள்ளை அடித்துச் செல்லப்படுகின்றன. இதை தடுத்து நிறுத்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

எனவே, தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட புதிய மணல் குவாரிகளை திறக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்வது, செயற்கை மணல் உற்பத்தியை அதிகரித்து, விலையை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் கட்டுமானப் பணிகளுக்கான மணல் தேவையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post புதிய மணல் குவாரி திறக்கும் திட்டத்தை கைவிடவேண்டும்: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,PMK ,Tamil Nadu government ,Tamil Nadu ,Kongu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்...