×

நட்பு, நல்லெண்ண கொள்கைகளை மதிக்கவில்லை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் செயல்களே காரணம்: வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு

புதுடெல்லி: சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்துக்கு பாகிஸ்தானின் செயல்களே காரணம் என ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டி உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்துக்கு பாகிஸ்தானின் செயல்களே காரணம் என ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வௌியுற செயலர் விக்ரம் மிஸ்ரி வௌியிட்டுள்ள விளக்க குறிப்பில், “1960ம் ஆண்டு ஏற்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்த முன்னுரையில் நல்லெண்ணம் மற்றும் நட்புணர்வில் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த நல்லெண்ணம், நட்பு என்ற கொள்கைகள் எல்லாம் பாகிஸ்தானால் கைவிடப்பட்டு விட்டன.

பாகிஸ்தானின் தொடர் எல்லை தாண்டிய தீவிரவாத செயல்கள் ஒப்பந்தத்தை அதன் விதிகளின்படி பயன்படுத்தி கொள்ளும் இந்தியாவின் திறனில் தலையிடுகிறது. அடிப்படை நிலவரங்கள் முற்றிலும் மாறியிருக்கும்போது ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது என்பது இந்தியாவின் உரிமைக்குட்பட்டது மற்றும் இயற்கையானது. மேலும், 1950, 1960களுக்கு முற்பகுதியில் இருந்த பொறியியல் நுட்பங்களை அடிப்படையாக கொண்ட இந்த ஒப்பந்தம் பற்றி 21ம் நூற்றாண்டுக்கு ஏற்றவாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவசியம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நட்பு, நல்லெண்ண கொள்கைகளை மதிக்கவில்லை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் செயல்களே காரணம்: வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Ministry of External Affairs ,New Delhi ,Union Ministry of External Affairs ,Ministry of External Affairs… ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...