×

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி ராணுவ திடலில் வரும் 25ம்தேதி ‘தேசம் காக்கும் ராணுவ வீரர்களுக்கு சல்யூட்’ என்ற தலைப்பில் சிந்தூர் ஆபரேஷன் போரில் வெற்றி கண்ட ராணுவ வீரர்களுக்கு ‘ஜெய்ஹிந்த் சல்யூட்’ என்னும் தலைப்பிலும் நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் சார்பில் மிகப் பெரிய மாநாடு நடைபெற உள்ளது.

பாஜ ஆளும் மாநிலங்களில் எந்தவித அமலாக்கத்துறையோ, வருமானவரித் துறை சோதனையோ கிடையாது. பாஜ ஆளாத மாநிலங்களை குறிவைத்து தாக்குகிறார்கள் என்றால் அரசியலமைப்பு சட்டம் எங்கே வேலை செய்கிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடத்தப்படும் பழிவாங்கும் நடவடிக்கையை பாஜ அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Chennai ,Tamil Nadu ,Congress ,Selvapperundhagai ,Sathyamoorthy Bhavan ,Trichy Army Grounds ,Sindhur Operation War ,Dinakaran ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...