×

மதுரையில் திமுக பொதுக்குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: மதுரையில் வரும் 1ம் தேதி நடைபெற உள்ள திமுக பொதுக்குழு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கடந்த 3ம் தேதி நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் ஆக்கப் பணிகள் குறித்தும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும். வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது அறிவுறுத்தியிருந்தார்.

மேலும் திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற ஜூன் 1ம் தேதி கூடல் மாநகராம் மதுரையில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.  இந்த நிலையில் திமுக பொதுக்குழு ஏற்பாடுகள் தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது மாநாடு தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

The post மதுரையில் திமுக பொதுக்குழு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Maduraya Dimuka Public Committee ,Chief Mu. K. ,Stalin ,Chennai ,Dimuka Public Meeting ,Madura ,First Minister ,K. Stalin ,Dimuka District ,Anna Education Artist Hall ,Madurai Dimuka Public Committee ,K. ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…