×

அருப்புக்கோட்டை அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

அருப்புக்கோட்டை, மே 22: விருதுநகர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முத்துபாண்டியன் கூறியுள்ளதாவது: அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025-2026ம் கல்வி ஆண்டிற்கான பி.ஏ. தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.எஸ்சி கணிதம், பி.காம், பி.காம். சி.ஏ, ஆகிய பாடப்பிரிவுகளுக்கு வருகிற 27ம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான உதவிக்கு கல்லூரி வளாகத்திலேயே மாணவர் சேர்க்கை உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

The post அருப்புக்கோட்டை அரசு கலை கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Aruppukottai Government Arts College ,Aruppukottai ,Virudhunagar district ,Aruppukottai Government Arts and Science College ,Aruppukottai Government Arts ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு