×

கார்கள் மோதல் அதிமுக மாஜி அமைச்சரின் உறவினர் சாவு

போடி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்தவர் அருண் (47). அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அக்காவின் மருமகன். இவர் மனைவி சத்தியபாமா, மகள் ரம்யா, மகன் ரஞ்ஜித் பாலாஜி ஆகியோருடன் காரில் மூணாறுக்கு சுற்றுலா சென்றார். காரை டிரைவர் காளிதாஸ் ஓட்டி சென்றார். சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று மாலை ஊருக்கு புறப்பட்டனர். கார் போடிமெட்டு வழியாக மலைச்சாலையில் முந்தல் செக் போஸ்ட் அருகே எதிரே வந்த காருடன் மோதியது. இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மனைவி, மகள், டிரைவர் காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

The post கார்கள் மோதல் அதிமுக மாஜி அமைச்சரின் உறவினர் சாவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Arun ,Thirutangal ,Sivakasi ,Virudhunagar district ,Rajendra Balaji Akka ,Munnar ,Sathiyabhama ,Ramya ,Ranjith Balaji ,
× RELATED அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி...