×

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்: அலைக்கழிக்கும் அதிகாரிகளால் பயனாளிகள் அதிருப்தி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை அலைக்கழிப்பதால், அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டிபட்டி பகுதியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மற்றும் திருமண நிதியுதவிக்காக பட்டப்படிப்பு முடித்த பெண்கள், 10 அல்லது 12ம் வகுப்பு முடித்த பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். சமுக நலத்துறை மூலம் வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு, கடந்த 27ம் தேதி தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெறுவதாக பயனாளிகளிடம் சமுக நலத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இதற்காக வைகை அணை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்பதிவு செய்யப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பயனாளிகள் விழா நடைபெறும் தனியார் மண்டபத்திற்கு வந்திருந்தனர். ஆனால், அங்கு திருமணம் நடைபெற்று கொண்டிருந்ததால், அதிகாரிகளை பயனாளிகள் தொடர்பு கொண்டபோது, நாளை (நேற்று) நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். இதன்படி, நேற்று காலை மண்டபத்திற்கு முன்பு சுமார் 30க்கும் மேற்பட்ட பயனாளிகள் வந்தனர். ஆனால், மண்டபம் பூட்டப்பட்டிருந்ததால் பயனாளிகள் ஆத்திரமடைந்தனர். இது குறித்து அதிகாரிகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்டாலும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர். இது குறித்து பயனாளிகள் கூறுகையில், ‘சமூக நலத்துறை அதிகாரிகள் முறையாக தெரிவிக்காமல் எங்களை அலைய விடுகிறார்கள். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்….

The post தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்: அலைக்கழிக்கும் அதிகாரிகளால் பயனாளிகள் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Dhali ,Antipati ,Dinakaran ,
× RELATED கோபத்தைக் குறைக்க உதவும் உலர் திராட்சை!