×

சின்னமனூர் அருகே சாலையோரம் குவிக்கப்படும் குப்பை: ஊராட்சி நிர்வாகம் அகற்ற கோரிக்கை

சின்னமனூர்: சின்னமனூர் அருகே, சீலையம்பட்டி கிராமத்தில் சுமார் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில், மெயின்ரோட்டில் பூக்கடை இருக்கும் வளாகப்பகுதியில் குப்பைகளை குவித்து வருகின்றனர். இதன் அருகே, மேலப்பூலானந்தபுரம் செல்லும் சாலையும் உள்ளது. இந்நிலையில், சாலையோரம் குவிக்கப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சீலையம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் குப்பையை அள்ள நடவடிக்கை இல்லை. எனவே, குப்பையை அகற்ற மாவட்ட நிர்வாகம் ஊராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்….

The post சின்னமனூர் அருகே சாலையோரம் குவிக்கப்படும் குப்பை: ஊராட்சி நிர்வாகம் அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Panchayat administration ,Seelaiyambatti ,Dindigul-Kumuli National Highway ,Dinakaran ,
× RELATED கோயில் திருவிழாக்களால் செண்டு பூ விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி