×

சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் அயோத்திதாச பண்டிதர் பெயர் சூட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் சமுக வலைதள பதிவில்:
மே 20: பண்டிதர் அயோத்திதாசர் பிறந்தநாள்:
சென்னையில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், ஆதிதிராவிட மக்களுக்காக 1000 கோடி ரூபாயில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் ‘திராவிடப் பேரொளி’ அயோத்திதாசரைப் போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்! என முதல்வர் பதிவிட்டுள்ளார்.

The post சமத்துவத்தை வலியுறுத்திய அயோத்திதாச பண்டிதர் கருத்துகள் வலுக்கட்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Ayodhidasa Pandit ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Pandit ,Ayodhidasa ,Chennai… ,Dinakaran ,
× RELATED சகோதர உணர்வுமிக்க இந்தியா தான்...