×

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!!

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் செய்யப்பட்டது. நீர் வரத்து அதிகரிப்பால் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து, குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோடை விடுமுறைக்காக குற்றாலத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்த மக்களுக்கு வெயிலின் தாக்கம் அதிர்ச்சியை அளித்தது.

கடந்த இரண்டு மாத காலங்களாக தென்காசி மாவட்டத்தில் கொளுத்திய கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் வறண்ட நிலையிலே காணப்பட்டு வந்தன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வறண்ட நிலையிலே காணப்பட்டு வந்தன. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் குற்றாலத்தில் சீசன் தொடங்கவுள்ளது.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தற்போது தண்ணீர் வர தொடங்கியுள்ளது. தற்போது, மழை அளவு குறைந்து, வெயில் அடிக்கத் தொடங்கியதால், தண்ணீர் வரத்து சீராகியுள்ளது.

அதனால், குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 7 நாட்களுக்குப் பிறகு, வெள்ளப்பெருக்கு குறைந்து, அருவியில் தண்ணீர் சீராக விழுந்ததால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Courtallam Main Falls ,Courtallam Falls ,main falls… ,Dinakaran ,
× RELATED அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி...