×

ரஷ்யா – உக்ரைன் இடையே உடனடி பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபர் டிரம்ப்

வாஷிங்டன்: போர்நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா – உக்ரைன் இடையே உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனுடனான போர் குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். போரை முடிவுக்கு கொண்டுவரத் தயார் என ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்ததாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாடல் அர்த்தம் உள்ளதாக இருந்தது. உக்ரைன் பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாக புதின் கூறினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

The post ரஷ்யா – உக்ரைன் இடையே உடனடி பேச்சுவார்த்தை: அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.

Tags : Russia ,Ukraine ,US ,President Trump ,Washington ,Russian Chancellor ,Mint ,Dinakaran ,
× RELATED வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு...