×

61வது லீக் போட்டியில் இன்று ஆறுதல் தேடும் சன்ரைசர்ஸ் தேறுதல் நாடும் லக்னோ

* ஐபிஎல் 18வது தொடரின் 61வது லீக் போட்டி, லக்னோவில் இன்று நடக்கிறது.
* இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
* ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி, 11 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளை பெற்று, புள்ளிப் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ளது.
* பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி, இதுவரை 11 போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 7 தோல்வி, ஒரு போட்டியில் டை ஆனதால் ஒரு புள்ளியுடன் சேர்த்து 7 புள்ளிகளுடன் பட்டியலில் 9ம் இடத்தில் உள்ளது.
* லக்னோ – சன்ரைசர்ஸ் அணிகள் இதுவரை, 5 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
* அவற்றில், லக்னோ 4 முறையும், சன்ரைசர்ஸ் ஒரு முறையும் வென்றுள்ளன.
* அப்போட்டிகளில் அதிகபட்சமாக, சன்ரைசர்ஸ் 190 ரன்களையும், லக்னோ, 193 ரன்களையும் விளாசியுள்ளன.
* குறைந்தபட்சமாக, சன்ரைசர்ஸ் 121, லக்னோ 165 ரன்கள் எடுத்துள்ளன.
* லக்னோ அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், 2வது போட்டியை தவிர மற்ற 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
* சன்ரைசர்ஸ் அணி கடைசியாக ஆடிய 5 போட்டிகளில், முதல் இரண்டில் தோல்வி, 3வதில் வெற்றி, 4வதில் தோல்வி, 5வது போட்டியில் டை ஆகிய முடிவுகளை பெற்றுள்ளது.
* சன்ரைசர்ஸ் அணி, பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
* புள்ளிப் பட்டியலில் 7ம் இடத்தில் உள்ள லக்னோ, மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டும்.
* தவிர, பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள மும்பை, 5ம் இடத்தில் உள்ள டெல்லி அணிகள் மீதமுள்ள போட்டிகளில் தோற்கும் பட்சத்தில் லக்னோ, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உருவாகும்.

The post 61வது லீக் போட்டியில் இன்று ஆறுதல் தேடும் சன்ரைசர்ஸ் தேறுதல் நாடும் லக்னோ appeared first on Dinakaran.

Tags : Sunrisers ,61st league match ,Lucknow ,IPL ,Lucknow Supergiants ,Hyderabad ,Rishabh Pant ,Dinakaran ,
× RELATED பிட்ஸ்