×

இஓஎஸ்-09 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்


சென்னை: ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி- சி61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.ராக்கெட் ஏவுதலுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 7.59 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ்09 என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு சொந்தமான 5 சிறிய செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில், முதன்மை செயற்கைக்கோளான இஓஎஸ்-09 மொத்தம் 1,696 கிலோ எடை கொண்டது.

சி-பேண்ட் சிந்தடிக் அபெர்ச்சர் ரேடார் கருவி உள்ளது. இதன்மூலம் இரவு – பகல் என எந்த நேரத்திலும், அனைத்து பருவநிலைகளிலும் துல்லிய படங்களை எடுக்கமுடியும். புவி கண்காணிப்பு மட்டுமின்றி, நாட்டின் எல்லை பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், காடுகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளுக்கானன முக்கிய தகவலை வழங்கும். ஏற்கனவே அனுப்பப்பட்ட ரிசாட்-1ஏ செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்த அதிநவீன செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

The post இஓஎஸ்-09 செயற்கைக்கோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Satish Dhawan Space Centre ,Sriharikota ,Dinakaran ,
× RELATED கோட்டூர் அருகே சாலை விபத்தில் இறந்த...