×

சாலையின் தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதிய பேருந்து; 4 பேர் உயிரிழப்பு!

சாலையின் தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது பேருந்து மோதியுள்ளது. வேனில் பயணம் செய்த 8 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடியில் இருந்து சுற்றுலாவுக்காக கரூர் மாவட்டத்திற்கு வேனில் சிலர் சென்றுகொண்டிருந்தனர். இந்நிலையில் கரூர் வெண்ணெய்மலை அருகே வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் சேலத்திலிருந்து கரூர் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த சுற்றுலா வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

ஆம்னி பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் எதிர்பாராதவிதமாக சிறுமி தக்சிகா (வயது 8), சிறுவன், சுற்றுலா வேன் ஓட்டுநர் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் சிக்கி 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுற்றுலாவிற்கு வந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post சாலையின் தடுப்பை தாண்டி எதிர்திசையில் வந்த வேன் மீது மோதிய பேருந்து; 4 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Karur district ,Karur Veneymalai ,Dinakaran ,
× RELATED சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு...