×

சுமார் 8 மணி நேரம் விசாரணை: டாஸ்மாக் MD விசாகனை நுங்கப்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை

சென்னை: சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை பிறகு டாஸ்மாக் MD விசாகனை நுங்கப்பாக்கம் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அழைத்து சென்றது. விசாரணைக்கு ஆஜராகுமாறு விசாகனுக்கு 2 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

விசாரணைக்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வீட்டில் வைத்து விசாகனை வளைத்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாகனை விசாரிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

காலை முதல் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அமலாக்கத்துறை தங்கள் காரில் ஏற்றி விசாகனை அழைத்துச் சென்றது. ரெய்டின் போது டாஸ்மாக் MD விசாகனிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாகனை விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விசாகனின் வீட்டிற்கு அருகே வாட்ஸ் அப் சாட்களின் ஸ்கிரீன் ஷாட் ஆவணங்கள் சிதறிக்கிடந்த நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக விசாகன் உச்சநீதிமன்றம் சென்று இருந்தார்.

The post சுமார் 8 மணி நேரம் விசாரணை: டாஸ்மாக் MD விசாகனை நுங்கப்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து சென்றது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,TASMAC MD Visakhan ,Nungapakkam ,Chennai ,TASMAC ,MD ,Visakhan ,Court ,Dinakaran ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...