×

முஸ்லிம் சமுதாயம் திமுக ஆட்சிக்கு ஆதரவாக உள்ளது: காதர் மொகிதீன் பேட்டி

சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவராக காதர் மொகிதீன், பொதுசெயலாளராக கேரளா சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் குஞ்ஞாலிக்குட்டி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து காதர் மொகிதீன் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு முஸ்லிம் சமுதாயம் உள்ளிட்ட அனைவரும் ஆதரவாக உள்ளனர். முஸ்லிம் சமுதாயம் திமுக ஆட்சிக்கு ஆதரவாக உள்ளது. அடுத்து வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன்தான் கூட்டணி, கேரளாவிலும் காங்கிரஸ் உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம்.

The post முஸ்லிம் சமுதாயம் திமுக ஆட்சிக்கு ஆதரவாக உள்ளது: காதர் மொகிதீன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Muslim ,Dimuka ,Kadar Mogidin ,Chennai ,National Counselling ,Indian Union Muslim League ,Union Muslim League Party of India ,Deputy ,Kerala Assembly ,Qadar Mogidin ,
× RELATED தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி...