×

நக்சல் வேட்டையில் காயமடைந்த வீரர்களுடன் அமித் ஷா சந்திப்பு

புதுடெல்லி: தெலங்கானா மற்றும் சட்டீஸ்கர் எல்லையில் 21 நாள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது 5 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த வீரர்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று நேரில் சந்தித்தார். அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

The post நக்சல் வேட்டையில் காயமடைந்த வீரர்களுடன் அமித் ஷா சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Amit Shah ,Naxal hunt ,New Delhi ,anti-Naxal operations ,Telangana ,Chhattisgarh ,Delhi ,AIIMS ,Union Home Minister ,Dinakaran ,
× RELATED ககன்யான் திட்டத்தில் அடுத்த...