×

அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஒன்றிய அரசு விளக்கம்


டெல்லி: அருணாச்சலப்பிரதேசத்தின் இந்தியா-சீனா எல்லை பகுதியில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்ற சீனா முயற்சிப்பதை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘இந்தியாவின் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு பெயரிட சீனா பயனற்ற மற்றும் அபத்தமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது, எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தியா அத்தகைய முயற்சிகளை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற மறுக்க முடியாத யதார்த்தத்தை இதுபோன்ற பெயரிடுதல் மாற்ற முடியாது’ என்றார். இதுதொடர்பாக பேசிய ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘அருணாச்சலப்பிரதேசம் நேற்று, இன்று, நாளை என எப்போதும் இந்தியாவின் ஒரு மாநிலமாகும். பெயரை மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது’ என்றார்.

The post அருணாச்சல பிரதேச பகுதிகளின் பெயர்களை சீனா மாற்றுவதால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : China ,Arunachal Pradesh ,Union Government ,Delhi ,India ,India-China ,External Affairs Ministry ,Randhir Jaiswal ,Dinakaran ,
× RELATED தேனாம்பேட்டையில் உள்ள வங்கதேச நாட்டு...