×

தீவிரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் : ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

காஷ்மீர் : காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ராணுவ வீரர்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பாக அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி உபேந்திரா திவேதி நேரில் ஆய்வு செய்தனர். இதனிடைய ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், “எதிரிகளை நாம் வீழ்த்திய விதத்தை அவர்களால் எப்போதும் மறக்க முடியாது. தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில் இதுதான் பெரியது. பாதுகாத்துக் கொள்ள மட்டுமல்ல இந்தியாவுக்கு பதிலடியும் கொடுக்க தெரியும் என ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.தீவிரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் .”என்றார்.

The post தீவிரவாதத்தை ஒழிக்க எந்த எல்லைக்கும் செல்வோம் : ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union Defence ,Minister ,Rajnath Singh ,Kashmir ,Srinagar, Kashmir ,Army Commander ,Upendra Divedi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்