×

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; காசாவில் 22 சிறுவர்கள் உட்பட 60 பேர் பலி

டெய்ர் அல் பலாஹ்: காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 சிறுவர்கள் உட்பட மொத்தம் 60 பேர் பலியாகி உள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று முன்தினம் கூறுகையில், காசா மீதான இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கு எந்த வழியும் இல்லை என்று கூறியிருந்தார். இது போர்நிறுத்தம் தொடர்பான நம்பிக்கையை குறைத்தது. இந்நிலையில் காசா மீது இஸ்ரேல் நேற்று அதிகாலை வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இது தொடர்பாக காசா சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் தாக்குதலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 22 பேர் சிறுவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; காசாவில் 22 சிறுவர்கள் உட்பட 60 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Gaza ,Deir al-Balah ,Benjamin Netanyahu ,Israel ,Gaza… ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது