×

கத்தார் அரசு வழங்குகிறது; அதிபர் டிரம்புக்கு விமானம் பரிசு

ரியாத்: சிரியா மீதான பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, சவுதி அரேபியாவில் அவர் சிரியா அதிபர் அஹமது அல் ஷராவை சந்தித்து பேசினார். பின்னர், கத்தார் சென்ற அதிபர் டிரம்புக்கு ரூ.3,500 கோடி மதிப்பிலான அதிநவீன விமானத்தை பரிசளிக்க அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. டிரம்ப் கூறுகையில், ‘‘இப்படிப்பட்ட பரிசை முட்டாள் தான் நிராகரிப்பான். இந்த விமானம் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு வழங்கப்படுகிறது ’ என்றார். இதற்கிடையே அதிபர் டிரம்பை சந்திக்க தொழிலதிபர் முகேஷ் அம்பானி கத்தார் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post கத்தார் அரசு வழங்குகிறது; அதிபர் டிரம்புக்கு விமானம் பரிசு appeared first on Dinakaran.

Tags : QATAR ,TRUMP ,Riyadh ,U.S. ,President Trump ,Syria ,Saudi Arabia ,President ,Ahmed Al Shara ,Qatar Government ,Dinakaran ,
× RELATED கீவ் நகரம் மீது 519 டிரோன்களை வீசி...