×

புதுப்பேட்டை அருகே தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது

பண்ருட்டி, மே 15: தாசில்தார், கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் புதுப்பேட்டை அடுத்த எனதிரிமங்கலம் கிராமத்தில் வீடு, நிலம் இல்லாத பழங்குடி சமூக மக்களுக்கு, அதேபகுதியில் வீடு கட்டி தரும் ெபாருட்டு, பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், வருவாய் துறை சார்பில் நேற்றுமுன்தினம் பூமி பூஜையை முடித்து நிலம் அளவீடு செய்தனர்.

அப்போது எனதிரிமங்கலம் கர்ணம் பகுதியை சேர்ந்த ஏசகன் மகன் தமிழ்ச்செல்வன்(32), வடிவேல் மகன் மணிகண்டன்(30) ஆகிய 2 பேரும் அங்கு வந்த வெளியூர் நபர்களுக்கு ஏன் இங்கு இடம் தருகிறீர்கள், எப்படி வேலை நடக்கும் என்று பார்க்கிறேன் என்று கூறி தாசில்தார், கிராம நிர்வாக அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்து கத்தியை காட்டி அசிங்கமாக திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராதிகா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, தமிழ்ச்செல்வன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post புதுப்பேட்டை அருகே தாசில்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tahsildar ,Pudupettai ,Panruti ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி-கடலூர் எல்லையில் தீவிர சோதனை