- ஜமாபந்தி
- கீழ்பென்னாத்தூர் தாலுகா
- Kilpennathur
- வருவாய் திருவாயம்
- வருவாய் திணைக்களம்
- வேட்டவலம்
- வட்டம்
- சோமாசிபடி
- கீழ்பென்னாத்தூர்…
கீழ்பென்னாத்தூர், மே 15: கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் வருவாய்த்துறை சார்பில் கிராம கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நாளை(16ம் தேதி) துவங்குகிறது. அதன்படி, நாளை வேட்டவலம் உள்வட்டத்திற்கும், 20ம் தேதி சோமாசிபாடி உள்வட்டத்திற்கும், 21ம் தேதி கீழ்பென்னாத்தூர் உள்வட்டத்திற்கும் ஜமாபந்தி நடக்க உள்ளது. கீழ்பென்னாத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாய கணக்குகளை சரிபார்ப்பதற்கான 1434ம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது. மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவா தலைமையில் நாளை (16ம் தேதி) வேட்டவலம் உள்வட்டத்துக்கான ஜமாபந்தியை தொடங்கி வைக்கிறார். ஜமாபந்தி நடக்கும் நாள்களில் அந்தந்த உள்வட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், வருவாய்த்துறை தொடர்பான குறைகள், பட்டா பெயர் மாற்றம், நலத்திட்ட உதவிகள் சம்பந்தமான குறைகளை தீர்க்கும் வகையில் கோரிக்கை மனுகளை ஜமாபந்தி அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம். இத்தகவலை கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சான்பாஷா தெரிவித்துள்ளார்.
The post நாளை ஜமாபந்தி துவக்கம் கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் appeared first on Dinakaran.
