- Kariyapatti
- விருதுநகர்-
- Mallanginar
- விருதுநகர்
- திருச்சி
- Parthibanur
- ராமேஸ்வரம்
- மல்லாங்கிணர் நகர்
- தின மலர்
காரியாபட்டி, மே 14: விருதுநகர்-மல்லாங்கிணறு நான்கு வழி சாலைக்கான நில எடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. விருதுநகரிலிருந்து திருச்சுழி, பார்த்திபனூர், ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் மல்லாங்கிணறு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் மல்லாங்கிணறு நகர் பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் சென்று வர சிரமங்கள் இருந்தது.
இது குறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் பேரில், தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின்படி, மல்லாங்கிணறில் புறவழிச் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. காரியாபட்டி மேல துலுக்கன் குளத்தில் துவங்கி முடியனூர் வரை புறவழிச்சாலை விரிவாக்க பணிகளுக்கு முதற்கட்டமாக நில எடுப்புக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது நில எடுப்பு பணிகள் தீவரமாக நடைபெற்று வருகிறது. இந்த புறவழிச்சாலை பணிக்கு ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
The post புறவழிச்சாலைக்காக நில எடுப்பு பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.
