×

மழை வேண்டி சமுத்திர ஆரத்தி

ராமேஸ்வரம், மே 14: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில், சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மகா சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மகா சமுத்திர ஆரத்தி சமிதியின் செயலாளர் தில்லைப் பாக்கியம் தலைமை வகித்தார். மழை வேண்டியும், அக்னி தீர்த்தம் மாசுபடாமல் இருக்கவும், இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும் சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் வட மாநில பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post மழை வேண்டி சமுத்திர ஆரத்தி appeared first on Dinakaran.

Tags : Samudra Aarti ,Rameswaram ,Chithirai Pournami ,Agni Theertha beach ,Maha ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை