- முத்துப்பேட்டை
- கோரையாறு ஆறு
- தமிழ்நாடு தோவீத் ஜமாஅத்
- முத்துப்பேட்டை மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல்
- திருவாரூர் மாவட்டம்
- கிளை தலைவர்
- நிலவொளி ஹாஜா முஹைதீன்
முத்துப்பேட்டை, மே 13: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாசலில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோடைகால பயிற்சி வகுப்பின் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் மூன்லைட் ஹாஜா முகைதீன் தலைமை தலைமை வகித்தார். இதில் துவக்கமாக நபீலா ஆலிமா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் பலரும் உரை நிகழ்த்தினார்கள். திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயலாளர் அப்துர் ரஹ்மான் பெற்றோர்களே உங்களைத்தான் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் ஏராளமான மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் அணிச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கோரையாற்றின் மேலே பாலம் முத்துப்பேட்டையில் கோடைகால பயிற்சி முகாம் appeared first on Dinakaran.
