நாகப்பட்டினம், மே13: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 264 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.14 ஆயிரம் மதிப்பில் திறன் பேசி, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 718 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பில் காதொலி கருவி என மொத்தம் 5 பயனாளிகளுக்கு ரூ.32 ஆயிரத்து 318 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 1 பயனாளிக்கு முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பு ரசீது மற்றும் 1 பயனாளிக்கு கல்வி உதவி தொகைக்கான காசோலை மற்றும் வட்ட வழங்கல் துறை சார்பில் 14 பழங்குடியின பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை ஆகியவற்றை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். டிஆர்ஓ பவணந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post நாகையில் ெபாதுமக்கள் குறைதீர் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.
