- வேடசந்தூர்
- திண்டுக்கல்
- கலெக்டர்
- சரவணன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- வேடசந்தூர்…
- தின மலர்
திண்டுக்கல், மே 13: திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதல்வர் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தினை அறிவித்துள்ளார்.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும் மற்றுமொரு திட்டமாகும். இத்திட்டத்தில் கலெக்டர் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஒருநாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அப்பகுதியில் அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இத்திட்டமானது மே 21ம் தேதி வேடசந்தூர் வட்டத்தில் நடைபெற உள்ளது. அதன் முன்னோடி மனுக்கள் பெற மே 13ம் தேதி வேடசந்தூர் வட்டத்திலுள்ள எரியோடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நில அளவை உதவி இயக்குநர் தலைமையிலும், வடமதுரை வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நிலம் கூடுதல் நேர்முக உதவியாளர் தலைமையிலும், அய்யலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், வேடசந்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும், வேடசந்தூர் வட்டத்தில் அந்தந்த உள்வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களிலுள்ள பொதுமக்களிடம் காலை 9.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மனுக்கள் பெறப்படவுள்ளது. மேலும் மே 21ம் தேதி உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடைபெறும் நாளில் அந்தந்த கிராமங்களுக்கு ஆய்வுக்காக நியமிக்கப்படும் அலுவலரிடமும் மனு அளிக்கலாம். எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தின் கீழ் மனு அளித்து, தங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
The post வேடசந்தூரில் மே 21ல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் appeared first on Dinakaran.
