×

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

நத்தம், மே 13: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே சேந்தமங்கலம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் அருள்குமார் (32). கூலித் தொழிலாளி. இவர் நத்தம் அருகே உள்ள புன்னப்பட்டிக்கு தனது மனைவி ஜெயமாலாவின் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள பனைமரத்தில் ஏறி நுங்குகள் பறித்தபொழுது எதிர்பாராதவிதமாக மரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்குமார் இறந்துள்ளார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post மரத்திலிருந்து விழுந்தவர் பலி appeared first on Dinakaran.

Tags : Natham ,Arulkumar ,Senthamangalam Mettupatti ,Vadipatti ,Madurai district ,Jayamala ,Punnapatti ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை