×

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவி சாதனை

பணகுடி,மே 13: தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். கேலோ இந்தியா நடத்தும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேசிய அளவிலான நீச்சல் போட்டி பீகார் மாநிலம் கயாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்ஏவி பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி வின்சியா தடகள பிரிவுகளில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் சுல்தான் சிக்கந்தர் பாஷா, சிக்கந்தர் சார்ஜன் மற்றும் அஜித்குமார் ஆகியோரை பள்ளித் தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் என ஏராளமானோர் வெகுவாகப் பாராட்டினர்.

The post தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் எஸ்ஏவி பாலகிருஷ்ணா பள்ளி மாணவி சாதனை appeared first on Dinakaran.

Tags : SAV Balakrishna School ,Panagudi ,Vadakankulam ,SAV Balakrishna Matriculation Higher Secondary School ,Khelo India ,Gaya, Bihar… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை