- திருத்துறைப்பூண்டி
- வேதாரண்யம்
- தஞ்சாவூர்
- மன்னார்குடி
- கோடியக்கரை சாலை
- திருச்சி தாலுகா நெடுஞ்சாலைத் துறை நபார்டு
- கிராமப்புற சாலைகள்…
- தின மலர்
வேதாரண்யம், மே 12: வேதாரண்யம் அருகே தஞ்சாவூர் – மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் – கோடியக்கரை சாலையில் சாலையை மேம்படுத்தும் பணி நடைபெற்றது. இப்பணியினை நெடுஞ்சாலைத்துறையின் உள்தணிக்கைக்காக அமைக்கப்பட்ட திருச்சி வட்டம் நெடுஞ்சாலைத்துறை நாபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் கண்காணிப்பு பொறியாளர் நிர்மலா தலைமையிலான பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வானது வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலத்தில் நடைபெற்றது.
சாலையின் தரம் மற்றும் அளவீடு குறித்து ஆய்வு ேமற்ெகாள்ளப்பட்டது. ஆய்வின் போது நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகு உதவிக் கோட்டப் பொரியாளர் வேல்முருகன், இளநிலை பொறியாளர் சுல்தான், மற்றும் நாகப்பட்டினம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு கோட்டப் பொறியாளர் நாகராஜன், வேதாரண்யம் உதவிக் கோட்டப் பொறியாளர் சுரேஷ், உதவிப் பொறியாளர் மதன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
The post திருத்துறைப்பூண்டியில் சாலை பணிகள் தணிக்கை குழுவினர் ஆய்வு appeared first on Dinakaran.
