×

4 மொழி படத்தில் ஸ்மிருதி வெங்கட்

சென்னை: அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தை இயக்கியவர் அரவிந்த் னிவாசன். இவர் இயக்கும் அடுத்த படம் ‘தருணம்’. இதில் ‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் நாயகனாக அறிமுகமான கிஷன் தாஸ் நடிக்கிறார். அவரது ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். படத்தை ஷென் ஸ்டூடியோ சார்பில் புகழ் தயாரிக்கிறார். தர்புகா சிவா இசை அமைக்கிறார், ராஜா பட்டாச்சார்யாஜி ஒளிப்பதிவு செய்கிறார். படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் முதல் நான்கு மொழி படம் இது.

படம் பற்றி அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறும்போது, ‘இது ஒரு வித்தியாசமான காதல் கதை. பல காதல் கதைகள் சொல்லப்பட்டிருந்தாலும் ஒரு காட்சிகூட முன்பு எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாத அளவிற்கான வித்தியாசமான படமாக இருக்கும். இன்றைய இளைஞர்களின் மெச்சூர்டான காதலை கண்ணியமாக சொல்லும் படம். 4 மொழிகளில் தயாராகும் படத்தில் முக்கிய கேரக்டர்கள் தவிர மற்ற கேரக்டர்களில் அந்தந்த மொழியை சேர்ந்தவர்கள் நடிக்கிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக அந்தந்த மொழி பேசும் பகுதிகளில் படமாகிறது’ என்றார்.

The post 4 மொழி படத்தில் ஸ்மிருதி வெங்கட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Smriti Venkat ,Chennai ,Arvind Nivasan ,Kishan Das ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...