×

ஜல்லி ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே, உரிய அனுமதியின்றி ஜல்லிகற்கள் ஏற்றி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆண்டிப்பட்டி அருகே புள்ளிமான் கோம்பை சாலையில் சப்-கலெக்டர் மற்றும் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு லாரிகளை மறித்து சோதனை செய்தனர்.

அதில், தவறான கேட் பாஸை வைத்து ஜல்லி கற்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அதிகாரி தங்கமாரிமுத்து, இது குறித்து ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், இரண்டு லாரிகளையும் பறிமுதல் செய்து லாரி டிரைவர்கள், உரிமையாளர்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள தனியார் கிரஷர் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

The post ஜல்லி ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Punthiman Gombai road ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு