×

கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை ஒன்றிய திமுக சார்பில் அட்டுவம்பட்டியில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்கம் பொது கூட்டம் நடந்தது. மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை தலைமை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ் பாண்டி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் உசிலை குபேந்திரன் தமிழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி பேசினார். இதில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்திரகுமார், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ராமு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சுரேஷ் நன்றி கூறினார்.

The post கொடைக்கானல் அட்டுவம்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Kodaikanal Attuvambatti ,Kodaikanal ,Attuvambatti ,Kodaikanal Upper Hill Union DMK ,Upper Hill Union ,Rajadurai ,Union Deputy Secretary ,Suresh Pandi ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை