திருவட்டார்: திருவட்டார் பஸ் நிலையம் எதிரில் கடந்த 15 ஆண்டுகளாக அரோமா பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை நவீன வசதிகளுடன் கூடிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்ட நிலையில் திறப்பு விழா நடந்தது. தமிழக சட்டபேரவை தலைவர் அப்பாவு சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்து வைத்தார். சிஎஸ்ஐ முன்னாள் பேராயர் தேவகடாட்சம் சிறப்பு ஜெபம் செய்தார். குருவிக்காடு சேகரத்துப்போதகர் சேம் கிறிஸ்டோபர், செண்மண்தரை கிரைஸ்ட் சிஎஸ்ஐ போதகர் சஜின், பங்குத்தந்தை வைஸ்லின் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மூவாற்றுபுழா டென்டல் கேர் டெஸ்ட் லேப் நிர்வாக இயக்குனர் சாஜூ குரியோஸ், தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த் எம்பி, தமிழக காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராஜேஷ்குமார், தமிழக நுகர் பொருள் வாணிபக்கழக தலைவர் சுரேஷ்ராஜன், தாரகை கத்பர்ட் எம்எல்ஏ, முன்னாள் எம்பி ஹெலன் டேவிட்சன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், முன்னாள் எம்எல்ஏ டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், திமுக மாவட்ட மருத்துவரணி செயலாளர் டாக்டர் பிஸ்வஜித் ஆல்பன்,
ஒய்எம்சிஏ தென் மண்டல தலைவர் வின்ஸ்டோ தங்பின், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் ஜூடு சேம், தமிழக ஐடிஏ தலைவர் டாக்டர் டயஸ், செயலாளர் சித்தார்த் நாயர், திருவட்டார் பேரூராட்சி தலைவர் பெனிலா ரமேஷ் மற்றும் பலர் பங்கேற்றனர். திறப்பு விழா ஏற்பாடுகளை டாக்டர் பியான்சோ சி .பி. டேனியல், டாக்டர் ஜெஸ்லின் பியான்சோ மற்றும் டாக்டர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
The post திருவட்டாரில் நவீன வசதிகளுடன் கூடிய அரோமா பல் மருத்துவமனை சபாநாயகர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
