×

கூடலூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

 

கூடலூர்: கூடலூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் ஒன்றிய அவைத் தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது.  இதில், ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் காந்தி செல்லதுரை, பத்மாவதி, பொருளாளர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் சிரிராஜா, பால்ராஜ், நேசக்குமார், சத்தியசீலன்,யூசுப், ஒன்றிய பிரதிநிதிகள் சரவணன், தட்சிணாமூர்த்தி, தொமுச மண்டல செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் உத்தமன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கங்காதரன், இளைஞர் அணி அமைப்பாளர் விவேக், துணை அமைப்பாளர் சனூப், கலை அமுதன், தேவசியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜுன் 3-ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாளை கூடலூர் ஒன்றியம் முழுவதும் அனைத்து கிளைகளிலும் எழுச்சியோடு கொண்டாடுவது என்றும், அனைத்து பகுதிகளிலும் கிளைக்கழக கூட்டங்கள் மற்றும் பாக முகவர்கள் கூட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. முடிவில் ஒன்றிய துணை செயலாளர் பத்மாவதி நன்றி கூறினார். முன்னதாக காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

The post கூடலூர் ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Gudalur Union DMK Executive Committee Meeting ,Gudalur ,Union ,President ,Karuppiah ,Union Secretary ,Liaquat Ali ,Secretaries ,Gandhi Selladurai ,Padmavathy ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி