×

வேடந்தாங்கலில் கிராம மக்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி

 

மதுராந்தகம்: சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் தமிழ்நாடு வனத்துறை இணைந்து, தமிழ்நாடு கிராமப்புற ஆண், பெண்கள், விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்கான தேனீ வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை முகாம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வனத்துறை அலுவலகத்தில் நடந்தது.

இந்த பயிற்சிக்கு வன உயிரியல் பாதுகாப்பு காப்பாளர் மனிஷ் மீனா தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் முன்னிலை வகித்தனர். வனச்சரகர் பிரபாகரன் வரவேற்றார். வேடந்தாங்கல் ஊராட்சியில் உள்ள 70 ஆண்களுக்கும், பெண்களுக்கும்தேனீ வளர்ப்பு குறித்தும் தேனீக்களை கையாள்வது குறித்தும் தேனை பிரித்து எடுப்பது, விற்பனை செய்வது குறித்து பயிற்சியாளர் பிரபஞ்சன் விளக்கினார்.

இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற 70 ஆண்களுக்கும் பெண்களுக்கும் மரப்பெட்டியில் வைத்து வளர்க்கப்பட்ட தேனீக்கள் பாதுகாப்பு உடை, தேன் எடுக்கக்கூடிய பாத்திரம் உள்ளிட்ட ரூ.7000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வனத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

The post வேடந்தாங்கலில் கிராம மக்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Vedanthangal ,Madhurantakam ,Chennai Petroleum Corporation ,Tamil Nadu Forest Department ,Tamil Nadu ,Vedanthangal Bird Sanctuary Forest Department ,
× RELATED ஆவடி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட...